ஹோட்டலில் பாரம்பரிய பட்டு புடவை அணிந்து கொண்டு உணவு பரிமாறும் ரோபோ! வைரல் புகைப்படங்கள்
இந்தியாவில் ஹோட்டல் ஒன்றில் ரோபோ ஒன்று பெண் வடிவத்தில் பட்டு சேலை அணிந்து கொண்டு உணவு பரிமாறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள சித்தார்த்தா உணவகத்தில் சப்ளையர்களுக்கு பதிலாக பாரம்பரிய பட்டு சேலை அணிந்து கொண்டு ரோபோ ஒன்று வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி சேவை செய்து வருகின்றது.
அந்த உணவகத்தில் சப்ளையர்கள் வழக்கம் போல் வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுத்து கொள்வார்கள். அந்த லிஸ்டை அவர்கள் ரோபோவிடம் கொடுக்க அது சமையல்காரரிடம் கொண்டு சேர்க்கும்.
பின்னர் சமையல்காரர்கள் கொடுத்து அனுப்புகின்ற உணவை ரோபோ சரியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கின்றது. இந்த ரோபோ 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 8 மணி நேரம் இந்த ரோபோ இயங்கும்.
அதுபோல செயற்கை நுண்ணறிவில் ரோபோ வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோ டெல்லியில் இருந்து சுமார் 2.5 லட்சம் பணம் கொடுத்து வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பட்டு சேலை அணிந்து கொண்டு உணவு பரிமாறும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.