மகளிர் உரிமைத்தொகைக்கான 1 ரூபாய் உங்கள் வங்கிக்கணக்கில் வந்ததா? சோதனை செய்யும் அரசு
தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை தவறான கணக்குகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக சோதனை முறையில் ரூ.1 அனுப்பப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை
குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததையடுது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
பின்பு, யாரெல்லாம் இந்த மகளிர் உரிமைத்தொகையை பெறலாம் என்று பயனாளிகளுக்கான தகுதியினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்தவகையில், இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ரூ.1 அனுப்பி சோதனை
இதனைத்தொடர்ந்து, விண்ணப்பதாரர்களின் வங்கிக்கணக்குகளை சரி பார்க்கும் வேலை நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விண்ணப்பதாரர்களின் வங்கிக்கணக்கிற்கு 1 ரூபாய் கடந்த இரு தினங்களாக அனுப்பப்பட்டு வருகிறது.
இதனால், 1 ரூபாய் அனுப்பப்பட்டவுடன் விண்ணப்பதாரர்களின் செல்போனிற்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் தவறான கணக்குகளுக்கு பணம் சென்று விடாது என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
அதுமட்டுமல்லாமல், விண்ணப்பதாரர்களின் செல்போனை தொடர்பு கொண்டும் வங்கி கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |