ரூ. 21 லட்சம் மதிப்புள்ள தக்காளியுடன் லொறி கடத்தல்! பொலிசார் வலைவீச்சு
ரூ. 21 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ஏற்றிச் சென்ற லொறி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்காளியுடன் லொறி கடத்தல்
இந்தியாவில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில், இந்திய மாநிலம் கர்நாடகாவில் கோலாரில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு தக்காளி ஏற்றிச் சென்ற 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லொறி காணாமல் போயுள்ளது. இதுகுறித்து கோலார் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, முதலில் லொறி ஒட்டிச் சென்ற டிரைவரையோ, லொறியையோ தொடர்பு கொள்ள முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், அண்டை மாநிலமான மகாராஷ்டிராவின் நாசிக் அருகே தக்காளி ஏற்றிச் சென்ற லாரி கண்டுபிடிக்கப்பட்டது என்றும், டிரக் சாரதி மற்றும் அவரது கூட்டாளி வாகனத்தையும் தக்காளியையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லொறியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் தக்காளி திருட்டு
தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி விலை உயர்வால் தக்காளி திருட்டு அதிகமாகியுள்ளது.
சமீப நாட்களில், நாட்டின் சில பகுதிகளில் தக்காளியின் விலை ஒரு கிலோ ₹ 170க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ₹ 2.7 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டது.
அப்போது, "நாங்கள் இரண்டு ஏக்கரில் தக்காளியை விதைத்தோம். ஆனால் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தக்காளி விளைகிறது, ஆனால் அவை ஒருபோதும் பழுக்கவில்லை. இந்த முறை அவை வளர்ந்தன. ஆனால் அவற்றை யாரோ திருடிவிட்டனர்" என்று விவசாயி கூறினார்.
மேலும், "என் கணவருக்கு பேச முடியாது. நாங்கள் இங்கே காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே வேலை செய்கிறோம். நாங்கள் எங்கள் உழைப்பையும் பணத்தையும் கொட்டினோம். ஆனால் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டன" என்று விவாசாயி வேதனையுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |