தப்பியோடிய ஜனாதிபதியின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா... வெளியாகியுள்ள வதந்திகளால் பதற்றம்
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் இருந்து புறப்பட்ட விமானம் ரேடாரில் இருந்து மாயமானதை அடுத்து, சிரிய சர்வாதிகாரி பஷர் அல் அசாத் தப்பியோடிய இடத்தைச் சுற்றி மர்மம் நிலவுகிறது.
ஜனாதிபதி அசாத்தின் இருப்பிடம்
கிளர்ச்சியாளகள் படை தலைநகர் டமாஸ்கஸை தாக்கி சிரியாவிற்கு சுதந்திரம் அறிவித்ததை அடுத்து ஐந்து தசாப்தங்களாக நீடித்த அசாத் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
டமாஸ்கஸ் நகரம் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், தப்பியோடியுள்ளதாக கூறப்படும் ஜனாதிபதி அசாத்தின் இருப்பிடம் மர்மமாகவே உள்ளது.
இந்த நிலையில் ரேடாரில் இருந்து காணாமல் போன விமானத்தில் அவர் பயணம் செய்திருக்கலாம் என்று இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. மேலும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது என்றும் சிலர் ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மாளிகையை கிளர்ச்சியாளர்கள் படை முற்றுகையிட்ட நிலையில், சிரியாவின் முதன்மையான நட்பு நாடான ரஷ்யா அசாத் பதவி துறந்துள்ளதாக உறுதி செய்தது.
இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் தலைநகரைக் கைப்பற்றிய நேரத்தில் டமாஸ்கஸிலிருந்து புறப்பட்ட சிரியன் ஏர் விமானம் தொடர்பில் வதந்திகள் பரவத் தொடங்கின. அந்த விமானமானது அசாத்தின் சமூகம் அதிகமாகக் கொண்ட கடற்கரை பகுதிக்கு பயணப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது
ரஷ்ய இராணுவத்தால் பயன்படுத்தப்படும் Ilyushin Il-76T ரக விமானமானது ரேடாரில் இருந்து 5.29 மணிக்கு மாயமாகியுள்ளது. இதனையடுத்து அசாத் பயணப்பட்ட அந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றே சிலர் உறுதியுடன் தெரிவிக்கின்றனர்.
நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், அந்த விமானமானது ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது, ஒருவேளை டிரான்ஸ்பாண்டர் அணைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் வெளியாகும் தரவுகளின் அடிப்படையில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றே தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொருவர் தெரிவிக்கையில், ஹோம்ஸ் அருகே விமானத்தின் சிக்னல் தொலைந்தது, ஆனால் அது பழைய டிரான்ஸ்பாண்டரின் காரணமாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |