ஒரு மணிநேரத்தில் உக்ரைனில் பாய்ந்த 17 ஏவுகணைகள்! ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல்
ரஷ்ய படைகள் ஒரு மணிநேரத்தில் 17 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
17 ஏவுகணைகள்
உக்ரைனின் கீவ் ராணுவ உளவுத்துறை நிறுவனம், ரஷ்யா ஒரு புதிய தாக்குதலை தொடங்கியிருப்பதாக கூறியுள்ளது. அதாவது, 17 ஏவுகணைகளை ரஷ்ய படைகள் ஏவியுள்ளன. அவை ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து பாய்ந்துள்ளன.
மூலோபாய குண்டுகள், கொலையாளி டிரோன்கள் மற்றும் ராக்கெட்டுகள் ஆகியவற்றின் தாக்குதலினால் உக்ரைன் முழுவதும் பல மணிநேரம் விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன.
@Reuters
பிப்ரவரி 24ஆம் திகதி அன்று, போரின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி ஒரு பாரிய தரை தாக்குதலுக்கு முன்னதாக, உக்ரைனின் பாதுகாப்பை தகர்க்க இந்த குண்டுவீச்சு புடினின் ஒரு முயற்சியாக அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலில் உக்ரைனின் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கில் உள்ள மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டதாக National Grid இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் சைரன்களை புறக்கணிக்க வேண்டாம் என அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர். ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை மற்றும் அழிவின் அளவு குறித்து இன்னும் தெரியவில்லை.
எனினும் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
@Alexey Nikolskyi | Sputnik | Reuters