ஜெலென்ஸ்கி மூலம் ரஷ்ய எதிர்ப்பு வெறியை தூண்டிவிட்டார்கள்! ஜி7 தலைவர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை அழைத்து, ஜி7 மாநாட்டை பிரச்சார நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்கள் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
ஜப்பானில் ஜி7 மாநாடு
ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார். அங்கு அவர் பிற நாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரினார்.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தலைவருக்கும் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜி7 தலைவர்களை குற்றம்சாட்டியுள்ளது.
AFP PHOTO/HANDOUT/UKRAINIAN PRESIDENTIAL PRESS SERVICE
ரஷ்யா குற்றச்சாட்டு
குறித்த அறிக்கையில், 'ஜி7யின் தலைவர்கள் தாங்கள் கட்டுப்படுத்தும் கீவ் ஆட்சியின் தலைவரை, தங்கள் கூட்டத்திற்கு அழைத்து வந்து ஹிரோஷிமா நிகழ்வை ஒரு பிரச்சார நிகழ்ச்சியாக மாற்றினர். உச்சி மாநாட்டின் முக்கிய முடிவானது வெறுக்கத்தக்க ரஷ்ய எதிர்ப்பு மற்றும் சீன எதிர்ப்பு செய்திகளால் நிரப்பப்பட்ட அறிவிப்புகள். ஜி7 ஆனது Anglo-Saxonsகளின் தலைமையின் கீழ், உலகளாவிய ஸ்திரத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அழிவு முயற்சிகள் செயல்படும் ஒரு காப்பகமாக மாறியுள்ளது' என தெரிவித்துள்ளது.
Stefan Rousseau / POOL
அழிவு நடவடிக்கைகள்
மேலும், இந்த அமைப்பின் (ஜி7) உறுப்பினர்கள் ரஷ்ய எதிர்ப்பு மற்றும் சீன எதிர்ப்பு வெறியைத் தூண்டுவதற்கு தங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்ய கட்டாயப்படுத்துகிறது எனவும் கூறியுள்ளது.
அத்துடன் ஜி7 மற்றும் அதன் அழிவு நடவடிக்கைகள் பற்றிய எங்கள் மதிப்பீடு சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையினரால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Russian Foreign Ministry/Reuters