ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடும் ரஷ்யா: மத்திய கிழக்கில் காத்திருக்கும் ஆபத்தான நாட்கள்
அமெரிக்க துருப்புக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களின் இருப்பிடங்கள் மற்றும் நகர்வுகள் குறித்து ரஷ்யா ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருவதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் அதிநவீன
இது, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் முன்னெடுத்துவரும் நிலையில், ரஷ்யாவும் போரில் ஈடுபட்டு வருவதற்கான முதல் அறிகுறி என கூறப்படுகிறது.

ரஷ்யா ஈரானுடன் பகிர்ந்து கொண்ட முதன்மையானத் தகவல்களில் பெரும்பாலானவை ரஷ்யாவின் அதிநவீன மேல்நிலை செயற்கைக்கோள்களின் படங்கள் என்றே கூறப்படுகிறது.
ஈரானியத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்று ரஷ்யாவின் உளவுத்துறை தாக்குதலுடன் தொடர்புடையதா என்பதும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் சமீபத்திய நாட்களில் அமெரிக்க துருப்புக்கள் தங்கியிருந்த இடங்களை பல ஈரானிய ட்ரோன்கள் துல்லியமாகவே தாக்கியுள்ளன.
இதனிடையே, ஈரானுக்கு நிதி உதவி, உதிரி பாகங்கள் மற்றும் ஏவுகணை பாகங்களை வழங்க சீனா தயாராகி வருவதாக அமெரிக்காவிற்கும் உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும், இதுவரை சீனா தலையிடவில்லை என்றே தகவல் கசிந்துள்ளது. ஈரானிய எண்ணெயை பெரிதும் நம்பியுள்ள சீனா, ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதிக்க ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
போர் மிக விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றே சீனா எதிர்பார்ப்பதாகவும், இதனாலையே, ஆதரவளிப்பது தொடர்பில் எச்சரிக்கையுடன் காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.
ட்ரோன் தொழிற்சாலை
வழக்கம் போல ஈரானுடனான போரில் ரஷ்யாவும் சீனாவும் உண்மையில் ஒரு பொருட்டே அல்ல என்று பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் ரஷ்யாவும் ஈரானும் குறைந்தது கடந்த மூன்று ஆண்டுகளாக ஒத்துழைத்து வருகின்றன. உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்த ரஷ்யாவிற்கு ஷாஹெத் ட்ரோன்கள் மற்றும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வழங்குகிறது.

மேலும், ரஷ்யாவிற்குள் ஈரானால் வடிவமைக்கப்பட்ட ட்ரோன்களை தயாரிக்கவும் ஒரு பெரிய ட்ரோன் தொழிற்சாலையை அமைக்க ஈரான் உதவுகிறது.
மட்டுமின்றி, ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை வலுப்படுத்த ரஷ்யாவின் உதவியை நாடியுள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கையில் தற்போது 50,000 க்கும் மேற்பட்ட துருப்புக்கள், 200 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறவில்லை. ஈரானின் அணு சக்தி திட்டங்களை ஒழிப்பதே இலக்கு என கூறி வந்த அமெரிக்காவும் இஸ்ரேலும், தற்போது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திறன்களை ஒழிப்பதே இலக்கு என கூறி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |