ரஷ்ய எல்லையைக் கடந்து... ஐரோப்பிய நாடொன்றில் புகலிடம் கோரிய பலர் திடீரென்று மாயம்
கடந்த ஆண்டு பின்லாந்தின் கிழக்கு எல்லையில் புகலிடம் கோரி விண்ணப்பித்த 160 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1,323 புகலிட விண்ணப்பங்கள்
ரஷ்யா வழியாக புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ள நிலையில், பின்லாந்தின் குடிவரவு ஆணையம் குறித்த தகவலை தெரிவித்துள்ளது.
@reuters
சிரியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து புகலிடம் கோருவோரின் வருகை அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ரஷ்யாவுடனான கிழக்கு எல்லையை பின்லாந்து மூடியது.
இந்த நிலையில் புலம்பெயர் மக்களை குறிவைத்து ரஷ்யா செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, ஆனால் அந்த குற்றச்சாட்டிற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை கிழக்கு எல்லையில் 1,323 புகலிட விண்ணப்பங்கள் கிடைத்ததாக குடிவரவு ஆணையம் மிக்ரி தெரிவித்துள்ளது.
நவம்பரில் 900 பேர்களும் டிசம்பரில் 300 க்கும் அதிகமானவர்களும் விண்ணப்பித்துள்ளனர். இதில் தற்போது 160 பேர்கள் மாயமாகியுள்ளதாக மிக்ரி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம்
இவர்களில் 18 பேர்கள் நெதர்லாந்து, பெல்ஜியம், நார்வே, சுவீடன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
@reuters
இந்த 160 பேர்களும் இதுபோன்று வேறு நாடுகளுக்கு சென்றிருக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள மிக்ரி நிர்வாகி, ஆனால் அவர்கள் எவரும் புகலிடம் கோரி இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.
பின்லாந்தில் புகலிடம் கோருவோரின் விரல் அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு, மொத்த ஐரோப்பிய நாட்டுக்கும் அந்த தரவுகள் பகிரப்படும். ஐரோப்பிய ஒன்றிய விதிகளின் கீழ், புலம்பெயர்ந்தவர் ஒருவர் முதலில் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடு தான் அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |