வீரர்களின் இழப்பை மறைக்க சதி திட்டம்: கொத்து கொத்தாக உடல்களை எரிக்கும் ரஷ்யா
உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை மறைக்க ரஷ்யா வீரர்களின் உடல்களை கிரிமியாவில் வைத்து எரிப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் தொடரும் போர்
கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கை இன்னும் ஒரு தினங்களில் ஓராண்டை கடக்க இருக்கிறது.
இருநாடுகளுக்கு இடையிலும் போர் தீவிரமடைந்து லட்சக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியும், போர் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரை காணப்படவில்லை.
Getty
தற்போது உக்ரைன் ரஷ்யா போரானது கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முட் மற்றும் வுஹ்லேதார் நகரங்களை சுற்றி தீவிரமடைந்து வருகிறது.
இழப்புகளை மறைக்கும் ரஷ்யா
இந்நிலையில் உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளை மறைக்க ரஷ்யா இறந்தவர்களின் உடல்களை ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதியில் வைத்து தகனம் செய்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதற்காக கிரிமியாவின் க்ராஸ்னா சோர்கா(Krazna Zorka) கிராமத்தில் உள்ள உள்ளூர் தகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல்களை எரிப்பதற்காக நிலையான வாகனங்கள் எப்போதும் அங்கு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AP
இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பதை ரஷ்யா நோக்கமாக கொண்டுள்ளது என்றும், கடந்த ஏழு நாட்களில் மட்டும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 824 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான இந்த போர் நடவடிக்கையில் இதுவரை மொத்தமாக 1,39,770 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.