உக்ரைன் மீதான போர் தந்திரோபாயங்களில் மாற்றம்: மரணங்களை கொண்டு ரஷ்யா பயங்கர திட்டம்
உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் தந்திரோபாயங்களை ரஷ்யா மாற்றி இருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
பொது மக்களை குறிவைக்கும் ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா சமீபத்தில் ஏவிய 18 ஏவுகணைகளில் 15-ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் ரஷ்யாவின் போர் தந்திரோபாயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது என்று உக்ரைனிய செய்து நிறுவனமான RBC உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
AP
மேலும், அதில் சந்தேகத்திற்கு இடம் இல்லாத அளவிற்கு ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனிய சிவிலியன் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதிகளை நேரடியாக தாக்குதல் நடத்துவதாக தெரிவித்துள்ளது.
சமாதான பேச்சுவார்த்தைக்கு இழுக்க முயற்சி
இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி-யின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் தெரிவித்துள்ள கருத்தில், உக்ரைனுக்கு எதிராக ஏவுகணைகளைப் பயன்படுத்தும் போது ரஷ்யப் படைகள் தங்களது தாக்குதல் தந்திரோபாயங்களை மாற்றி உள்ளது.
அந்த வகையில் தற்போது ரஷ்ய படைகள் இப்போது உக்ரைனிய சிவிலியன் கட்டமைப்புகளை குறிவைத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இத்தகைய தாக்குதலில் ஏற்படும் பொதுமக்களின் மரணங்களை கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான மேற்கு நாடுகளின் அழைப்புகளை அதிகரிக்க முடியும் என்றும் ரஷ்யா நம்புவதாக தெரிவித்துள்ளார்.