உக்ரைன் அந்த கிராமத்தை கைப்பற்றவில்லை - ரஷ்யா அதிரடி
ஆண்ட்ரிவ்கா கிராமத்தை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியதை ரஷ்யா அதிரடியாக மறுத்துள்ளது.
ஆண்ட்ரிவ்கா
டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் பாக்முட்டில் இருந்து தெற்கே 14 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் ஆண்ட்ரிவ்கா.
அங்கு சூன் மாதம் முதல் மாஸ்கோவின் படைகளுக்கு எதிராக கீவ் பின்வாங்கி வருகிறது. ஆனால், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அதன் தினசரி செய்திக்குறிப்பில், 'எதிரி...தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது...ஆண்ட்ரிவ்கா மற்றும் கிளிஷ்சிவ்கா பகுதிகளில் உள்ள ரஷ்ய துருப்புகளை வெளியேற்ற வீணாக முயற்சிக்கிறது' என கூறியுள்ளார்.
இதற்கு காரணம் என்னவென்றால், உக்ரைன் தங்கள் சொந்த துருப்புகள் முன் வரிசை கிராமமான ஆண்ட்ரிவ்காவை விடுவித்ததாக கூறியது தான்.
Tyler Hicks/New York Times
ரஷ்யா மறுப்பு
உக்ரைனின் இந்த கூற்றினை ரஷ்யா அதிரடியாக மறுத்துள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனில் சிதைந்த நகரமான பாக்முட் அருகே உள்ள கிராமங்களின் கட்டுப்பாட்டில் தனது படைகள் இருப்பதாக ரஷ்யா கூறியது.
அத்துடன் பாக்முட் தெற்கே குறைந்தது இரண்டு முக்கிய கிராமங்களையாவது அதன் துருப்புகள் இன்னும் வைத்திருக்கின்றன என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் சண்டைக் கணக்கு கூறுகிறது.
மேலும், ரஷ்யப் படைகள் 16 உக்ரேனிய தாக்குதல்களை முறியடித்துள்ளதாகவும், 16 டாங்கிகளுடன் 1,700க்கும் அதிகமானோர் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என எதிரிகளின் இழப்புகளுடன் ரஷ்ய அறிக்கை கூறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |