ஏவுகணைகளால் உக்ரைன் விமான நிலையத்தை சரமாரியாக தாக்கி அழித்த ரஷ்யா! வெளியான பரபரப்பு வீடியோக்கள்
உக்ரைனில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை, ரஷ்யா படைகள் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் Vinnytsia நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமே சரமாரி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
Vinnytsia, உக்ரைனின் மேற்கு-மத்திய உக்ரைனில் அமைந்துள்ள ஒரு நகரமாகும், மேலும் இது உக்ரேனிய தலைநகரான கீவில் இருந்து தென்மேற்கே 160 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், ரஷ்ய ராக்கெட்டுகள் ஒட்டுமொத்தமாக Vinnytsia விமான நிலையத்தை அழித்துவிட்டது.
சுமார் 8 ஏவுகணைகள் Vinnytsia விமான நிலையம் மீது தாக்கியது.
உடனடியாக நேட்டோ, உக்ரைன் வான்வெளியை மூடி, விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவியுங்கள். எங்களைப் பாதுகாப்பதும், மக்களைப் பாதுகாப்பதும் உங்கள் மனிதாபிமானக் கடமையாகும்.
உங்களால் கண்டிப்பாக முடியும். நீங்கள் அதைச் செய்யாவிட்டால், நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்ள போர் விமானங்களையும் தரவில்லை என்றால், நாங்கள் மெதுவாக கொல்லப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Breaking! pic.twitter.com/VCL5mpOVMi
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 6, 2022
அதேசமயம், ரஷ்ய ஏவுகணைகள் Vinnytsia விமான நிலையத்தை தாக்க சீறிச் சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Crazy footage show #Russian cruise missile heading towards #Vinnitsa Airport in #Ukraine pic.twitter.com/UsQPmhuSsP
— Zeitung (@Himat75) March 6, 2022
மேலும், தாக்குலுக்கு உள்ளான விமான நிலையம் தீ பிடித்து கொளுந்துவிட்டு எரியும் காட்சிகளும், வான் உயர கரும்புகை சூழ்ந்திருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
#NewsMap
— Julian Röpcke?? (@JulianRoepcke) March 6, 2022
The Putin regime fired Kalibr cruise missiles at #Vinnitsa airport, destroying its tower building.#PutinAtWar pic.twitter.com/EMU9K1tfid