மரியுபோல் ரயில் நிலையத்தை முற்றிலுமாக அகற்றும் ரஷ்ய படைகள்: குழப்பத்தில் உக்ரைன்
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள ரயில் நிலையத்தை ரஷ்ய படைகள் முற்றிலுமாக அகற்றி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
ரயில் நிலையத்தை அகற்றும் ரஷ்யா
போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய ராணுவ படையின் தொடர் தாக்குதலுக்கு உள்ளான மரியுபோல் நகரம், கடந்த ஆண்டு மே மாதம் முற்றிலுமாக ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.
அதிலிருந்து மரியுபோல் நகரில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து எந்தவொரு புதிய தகவலும் அவ்வளவாக வெளியே வராமல் இருந்தது.
Maxar Technologies
இந்நிலையில் உக்ரைனிய மேயரின் நாடுகடத்தப்பட்ட ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ(Petro Andriushchenko), மரியுபோல் நகரின் ரயில் நிலையத்தின் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் மரியுபோல் நகரின் ரயில் நிலையம் கிட்டத்தட்ட முற்றிலுமாக ரஷ்ய படைகளால் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், ஆக்கிரமிப்பாளர்கள் மரியுபோல் ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள தனியார் கட்டிடங்களை அப்புறப்படுத்துவதாகவும், அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
The Russian invaders in the Mariupol district are evicting an entire village in order to place the military there, said Petro Andryushchenko, adviser to the mayor of Mariupol. According to him, the enemy is actually evicting local residents to the streets. pic.twitter.com/Y6cmGqai8R
— NewsUkrainian24 (@NewsUkrainian24) April 10, 2023
அத்துடன், அந்த இடத்தில் ரஷ்ய படைகள் மிகப்பெரிய தளவாட மையத்தை உருவாக்க விரும்பலாம் என்றும், ஆனால் அவை தெளிவாக தெரியவில்லை என்று ஆண்ட்ரியுஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.