உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது குண்டு வீசிய ரஷ்யா: போர் குற்ற விசாரணையில் கண்டுபிடிப்பு
உக்ரைனில் ரஷ்யா நடத்தி இருக்கும் போர் குற்றம் தனக்கு கெட்ட கனவுகளை தருவதாக வழக்கறிஞர் கேட்ரியோனா முர்டோக் தெரிவித்துள்ளார்.
போர் குற்ற விசாரணை
போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் ரஷ்யா நடத்திய போர் குற்றங்கள் குறித்து பிரித்தானியாவின் முன்னணி வழக்கறிஞர் கேட்ரியோனா முர்டோக் கடந்த சில மாதங்களாக உக்ரைனில் விசாரணை நடத்தி வருகிறார்.
வழக்கறிஞர் கேட்ரியோனா முர்டோக் மற்றும் மனித உரிமைகள் சட்ட நிறுவனம் குளோபல் ரைட்ஸ் இணைந்து உக்ரைனிய மக்களை பசியில் தள்ள உணவு உட்கட்டமைப்பை ரஷ்ய ராணுவம் திட்டமிட்ட தாக்குதல் நடத்தியதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
CatrionaMurdoc1/Twitter
கிட்டத்தட்ட 6 மாதங்களாக உணவு பசி மீது விசாரணை நடத்தி வரும் கேட்ரியோனா முர்டோக் மற்றும் அவரது குழு போர் நடைபெறும் உக்ரைனில் வளர்ந்து வரும் இருண்ட வடிவத்தை கண்டுபிடித்துள்ளனர்.
உணவு உட்கட்டமைப்பு மீது தாக்குதல்
அதில் உக்ரைனில் உள்ள உணவு தொழிலை ரஷ்யா கொள்ளையடித்து வருவதாகவும், உக்ரைனிய பகுதிகளில் இருந்து வரும் மனிதாபிமான உதவிகளை ரஷ்யா தடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
Getty Images
அத்துடன் உணவு உதவி பொருட்களை வாங்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 14 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி இருக்கும் போர் குற்றங்கள் தனக்கு கெட்ட கனவுகளை தருவதாக வழக்கறிஞர் கேட்ரியோனா முர்டோக் தெரிவித்துள்ளார்.