ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தல்: ரஷ்யா நடத்திய தாக்குதல்.. அவசரமாக அழைத்த நாடு
தங்கள் இன மக்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஹங்கேரி குற்றம்சாட்டியுள்ளது.
11 ரஷ்ய ட்ரோன்கள்
உக்ரைனின் மேற்கில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால், அது கணிசமான ஹங்கேரிய இன சிறுபான்மையினர் வசிக்கும் பகுதி என்றும், குறிவைத்து அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஸகார்பத்தியா பிராந்தியத்தைச் சேர்ந்த உக்ரேனிய அதிகாரிகள், பல மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை 11 ரஷ்ய ட்ரோன்கள் குறிவைத்து தாக்கியதாகத் தெரிவித்தனர். இதில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதனையடுத்து புடாபெஸ்டில் உள்ள ரஷ்ய தூதரை ஹங்கேரி அழைத்துள்ளது. ஆனால், தூதரகத்திடம் இருந்து இதற்கு உடனடியாக எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
முதல் கட்ட ஏவுகணைகள்
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "ரஷ்யா மீண்டும் ஒருமுறை உக்ரைனுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும் ஐரோப்பா முழுவதற்கும் ஒரு பொதுவான அச்சுறுத்தலாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது.
இத்தாக்குதல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது; முதல் கட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுவிட்டன. இந்தக் கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவர, நமது ஒருங்கிணைந்த நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. உங்கள் கருணையும், உறுதியான நிலைப்பாடும் பாராட்டுக்குரியவை; நன்றி!" என பதிவிட்டார்.
Important message condemning Russia’s attack on Ukraine from @magyarpeterMP. Moscow has once again shown itself to be a common threat not only to Ukraine, but also to neighbouring countries and Europe as a whole. The attack is still ongoing. The first missiles have been launched.…
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) May 13, 2026
இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்லோவாக்கியா தனது உக்ரைன் எல்லையை சிறிது நேரத்திற்கு மூடியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |