இரவில் உக்ரைன் துறைமுக நகரை தொடர்ச்சியாக தாக்கிய ரஷ்ய டிரோன்கள்
உக்ரைனின் துறைமுக நகரமான இஸ்மைலை ரஷ்யாவின் டிரோன்கள் தொடர்ச்சியாக தாக்கின.
டிரோன் தாக்குதல்
கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு பின்வாங்கியதில் இருந்து, தெற்கு ஒடேசா பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களை மாஸ்கோ தொடர்ந்து குறிவைத்து வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு துறைமுகமான Izmail-யில் இரண்டாவது இரவு தொடர்ச்சியாக ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
அங்குள்ள அதிகாரிகள், ரஷ்யாவின் தாக்குதலின்போது துறைமுக உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தன மற்றும் பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்தனர்.
உக்ரேனிய விமானப்படை
மேலும், உக்ரேனிய விமானப்படை கூறுகையில், ''மாஸ்கோவினால் வடிவைக்கப்பட்ட 38 ஈரானிய வடிவ டிரோன்களில் 25 பாதுகாப்பு அமைப்புகளால் வீழ்த்தப்பட்டது'' என தெரிவித்தது.
அத்துடன் மேலும் 3 டிரோன்கள் ருமேனியாவின் மாநில எல்லையைத் தாண்டிய பின் வீழ்த்தப்பட்டது எனவும் கூறியது. உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, முந்தைய நாள் இஸ்மைல் மீது இதேபோன்ற ரஷ்ய தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.
ருமேனியாவின் இராணுவம் உக்ரைன் உடனான எல்லைக்கு அருகில் டிரோன் சிதறல்களை, இந்த தாக்குதலைத் தொடர்ந்து தேடியது. எல்லைக்கு அருகில் வசிக்கும் ருமேனியர்கள் வெடிப்புச் சத்தம் கேட்டதாக கூறினர்.
அதேபோல் ஒடேசா பிராந்தியத்தின் ஆளுநர் இந்தத் தாக்குதலில் நிர்வாக கட்டிடமும் சேதமடைந்ததாக குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |