வாக்னர் கூலிப்படையால் இன்னொரு நெருக்கடி: பயத்தில் பாதுகாப்பை பலப்படுத்திய ரஷ்யா
ரஷ்ய நிர்வாகத்துடன் மோதல் போக்கில் இருக்கும் வாக்னர் கூலிப்படை அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது புடின் நிர்வாகம்.
தீவிர பாதுகாப்பு நடவடிக்கை
வாக்னர் கூலிப்படைக்கு பயந்து கிரிமியன் பாலத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. சுமார் 10 மைல்கள் கொண்ட தொலைவைக் கடக்க, சுற்றுலா பயணிகளுக்கு 7 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
@afp
ரஷ்யாவை கிரிமியாவுடன் இணைக்கும் 3 பில்லியன் பவுண்டுகளால் கட்டுமானம் முடிக்கப்பட்ட Kerch பாலத்தில், கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் பயணியையும் ரஷ்ய நிர்வாகம் தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
அத்துடன், வாகனங்களை மறு கரைக்கு கொண்டுசெல்லும் படகு துறையிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்னர் கூலிப்படையால் எந்த நேரத்திலும் பெரும் தாக்குதல் ஒன்றை எதிர்பார்க்கும் ரஷ்யா, தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகின்றனர்.
@ap
கடும் கோபத்தில் வாக்னர் கூலிப்படை
கடந்த அக்டோபர் மாதம் Kerch பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு, பெரும் சேதம் ஏற்பட்டது. அந்த தாக்குதலுக்கு பின்னணியில் உக்ரைன் இருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், விளாடிமிர் புடின் மீது கடும் கோபத்தில் இருக்கும் வாக்னர் கூலிப்படையினர் முக்கிய தாக்குதல் ஒன்றை முன்னெடுக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. மேலும், வாக்னர் கூலிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கை அதன் தலைவர் பிரிகோஜினுடன் பெலாரஸ் நாட்டுக்கு தப்பியுள்ளனர்.
@reuters
எஞ்சியவர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான வாக்னர் கூலிப்படையினருக்கு ரஷ்ய நிர்வாகம் முன்வைக்கும் இந்த கட்டுப்பாடுகளில் உடன்பாடில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |