போலியான தகவலை வெளியிட்டதற்காக விக்கிப்பீடியா நிறுவனத்திற்கு ரஷ்யா அபராதம்
ரஷ்யா, உக்ரைன் போரைப் பற்றி போலியான தகவலை வெளியிடுவதாக கூறி ரஷ்யா விக்கிபீடியா(wikipedia) நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் போர்
கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா போர் சார்ந்த தகவல்களை ரகசியமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.
@cepa
இந்த நிலையில் விக்கிமீடியா(wikimedia) அறக்கட்டளைக்கு பலவிதமான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன, ஏனெனில் ரஷ்யா போர் சார்ந்த சுதந்திரமான தகவல் ஆதாரங்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய போலி தகவலை வெளியிடுவதாக ரஷ்ய அதிகாரிகள் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளனர்.
விக்கிப்பீடியாவிற்கு அபராதம்
இதனை அடுத்து போலியான தகவல்களை நீக்கக்கோரி நீதிமன்றம் கூறியதை அகற்றத் தவறியதற்காக, இணையத் தகவல் களஞ்சியமான விக்கிமீடியா அறக்கட்டளைக்கு கடந்த வியாழன் அன்று மாஸ்கோ நீதிமன்றம் $25 ஆயிரம் டொலர் அபராதம் விதித்துள்ளது.
@The Telegraph
கடந்த ஏப்ரலில், அதே நீதிமன்றம் விக்கிமீடியாவிற்கு இது போன்ற குற்றச்சாட்டில் இரண்டு வெவ்வேறு விசாரணைகளில் அபராதம் செலுத்த உத்தரவிட்டிருக்கிறது.
விக்கிமீடியாவின் மீது ரஷ்ய அதிகாரிகள் அளித்த புகாரின் படி சரியான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், விக்கிப்பீடியா தரநிலைகளுக்கு ஏற்கவும் உள்ளது என்று கூறியுள்ளது.
சமீபத்திய மாதங்களில், போர் பற்றிய பதிவுகளை டிக்டாக், கூகுள், பேஸ்புக் மற்றும் ட்வீட்டர் ஆகியவற்றுக்கு அபராதம் விதித்துள்ளன.
@AP
சமூக ஊடக தளங்கள் நாட்டின் இணைய சட்டங்களை மீறுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(vladimir putin) குற்றம் சாட்டியுள்ளார்.