நள்ளிரவில் 30 ஏவுகணைகளை வீசிய ரஷ்யா; அதில் 29-ஐ சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா வீசிய 30 ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை உக்ரைன் ஒரே இரவில் வான்வழித் தாக்குதலில் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று (வியாழன்) அதிகாலை உக்ரைனின் பல்வேறு பகுதிகளுக்கு எதிராக ரஷ்யா 30 குரூஸ் ஏவுகணைகளை ஏவியது. அதில், 29 ஏவுகணைகளை உக்ரேனிய வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது.
விஞ்சிய ஒரு ஏவுகணை ஒடேசாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்தைத் தாக்கியதில் ஒருவர் இறந்தார் மற்றும் இருவர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Reuters
பல வாரங்கள் அமைதிக்கு பிறகு, ரஷ்யா இந்த மாதம் ஒன்பதாவது முறையாக தலைநகரை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. புதிதாக வழங்கப்பட்ட மேம்பட்ட மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்தி உக்ரேனிய எதிர் தாக்குதலை மேற்கொண்டது. இதனால், இன்று அதிகாலை தலைநகர் கீவில் பயங்கரமான வெடி சத்தங்கள் கேட்டன.
29 ஏவுகணைகள் வானில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இரண்டு கீவ் மாவட்டங்களில் குப்பைகள் விழுந்து. இதில் ஒரு கேரேஜ் வளாகத்தில் தீப்பிடித்தது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் பற்றி உடனடி தகவல் எதுவும் இல்லை என்று கீவ் ராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்தார்.
Reuters
மேலும், உக்ரைன் இரண்டு ரஷ்ய வெடிக்கும் ட்ரோன்களையும் இரண்டு உளவு ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏவுகணைகள் ரஷ்ய கடல், வான் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவப்பட்டதாக உக்ரைன் தலைமை தளபதி ஜெனரல் வலேரி ஜலுஷ்னி கூறியுள்ளார்.
புதன்கிழமை இரவு 9 மணி முதல் வியாழன் காலை 5.30 மணி வரை உக்ரைன் பகுதிகளை குறிவைத்து பல ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Reuters
Reuters
Reuters
Reuters