உக்ரைன் போர்: அணு ஆயுதங்கள் பெலாரஸில் நிறுத்திய ரஷ்யா - புடின் உறுதி
ரஷ்யா ஏற்கனவே அணு ஆயுதங்களின் முதல் தொகுப்பை பெலாரஸில் நிலைநிறுத்திவிட்டதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதிசெய்துள்ளார்.
அணு ஆயுதங்கள் பெலாரஸிடம் ஒப்படைத்த ரஷ்யா- புடின் உறுதி
உக்ரைனுக்கு எதிரான போரில் வெற்றி பெறவும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய சக்திகளைத் தடுக்கவும் அணு ஆயுதங்களை பெலாரஸ்சில் நிலைநிறுத்துவேன் என்று புடின் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார். அது இப்போது நடந்துவிட்டது.
முதல் கட்ட அணு ஆயுதங்கள் திட்டமிட்டபடி பெலாரஸுக்கு வழங்கப்பட்டதாக புடின் உறுதி செய்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சர்வதேச பொருளாதார மன்றத்தில் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார்.
Bloomberg
அணு ஆயுதங்களின் முதல் கட்ட தொகுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் முழு திட்டத்தை முடிக்கப் போவதாகவும் புடின் அறிவித்தார்.
இதற்கிடையில், பெலாரஷ்ய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஆயுதங்கள் தங்கள் நாட்டுக்கு வந்து சேர்ந்ததாகக் கூறினார்.
தற்போது அவசியம் இல்லை
எல்லைகளை பாதுகாப்பதற்காகவே இந்த ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் புடின் கூறினார்.
presstv
ஆனால் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று பல நாடுகள் நம்புகின்றன. இதற்கிடையில், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாக தங்களுக்கு எந்த அறிகுறியும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறினார்.
முன்னதாக, மேற்கத்திய சக்திகளும் அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இதன் எதிரொலியாக அணு ஆயுதங்கள் பெலாரஸுக்கு மாற்றப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |