வேலை தேடிச் சென்ற இந்தியர்களை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பியுள்ள ரஷ்யா: அச்சத்தில் குடும்பத்தினர்
எப்படியாவது குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற ஆசையில் நிலத்தை விற்று, கடனை வாங்கி வேலைக்குச் சென்ற இந்தியர்களை, கட்டாயப்படுத்தி, ரஷ்யா, உக்ரைன் போருக்கு அனுப்பியுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.
வேலை தேடிச் சென்றவர்களை போருக்கு அனுப்பியுள்ள ரஷ்யா
வட இந்திய மாநிலங்களில் வாழும் பலர், எப்படியாவது குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற ஆசையில் நிலத்தை விற்று, கடனை வாங்கி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அப்படி ரஷ்யாவுக்கு வேலைக்குச் சென்ற சில இந்தியர்களை, கட்டாயப்படுத்தி, ரஷ்யா, உக்ரைன் போரில் ஈடுபடுத்திவருவதாக, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அச்சத்தில் குடும்பத்தினர்
சுற்றுலா விசாவில் சென்ற இந்தியர்கள் சிலரை, கட்டாயப்படுத்தி ரஷ்ய மொழியில் அச்சிடப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திடச் செய்து, வெறும் 15 நாட்கள் பயிற்சியளித்து, அவர்களுடைய மொபைல் போன்களையும் பாஸ்போர்ட்களையும் பறித்து வைத்துக்கொண்டு, போருக்குச் செல்லவில்லையானால் 10 ஆண்டுகள் சிறை செல்ல நேரிடும் என மிரட்டி ரஷ்யா போருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரும் குடும்பத்தினரும்.
போர்க்களத்திலிருந்து நடுக்கத்துடன் அவர்கள் அனுப்பியுள்ள செய்திகளைக் கண்டு அச்சத்தில் மூழ்கியிருக்கிறார்கள் அவர்களுடைய உறவினர்கள்.
இதற்கிடையில், ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்களை திருப்பி அனுப்புமாறு ரஷ்ய அதிகாரிகளுக்கு தாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருவதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Randhir Jaiswal தெரிவித்துள்ளார்.
சோகம் என்னவென்றால், போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இந்தியாவுக்கு வரத்துவங்கியுள்ளன. கடந்த மாதம், சூரத்தைச் சேர்ந்த Hemil Mangukiya மற்றும் ஹைதராபாதைச் சேர்ந்த Mohammad Asfan ஆகிய இருவரின் உயிரற்ற உடல்கள் இந்தியா வந்தடைந்துள்ளதால், ரஷ்யா உக்ரைன் போரில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்களின் குடும்பத்தினர் நடுக்கத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |