வயாகரா கொடுத்து., உக்ரேனிய மக்களை நாசம் செய்ய வலியுறுத்தும் ரஷ்யா! ஐநா பகீர்
உக்ரேனியர்களை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு ராணுவ வீரர்களுக்கு ரஷ்யா வலியுறுத்துகிறது.
அதற்காக இராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கிறது - ஐநா அதிகாரி பகீர் தகவல்
ஐ.நா அதிகாரி ஒருவர் மிகவும் தைரியமான கூற்றை வெளியிட்டார். ரஷ்ய வீரர்களுக்கு வயாகரா கொடுக்கப்படுவதாகவும், அதனால் அவர்கள் உக்ரேனியர்களை கற்பழிக்க முடியும் என்று கூறினார்.
பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர் எட்டாவது மாதமாக தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது, இந்த காலக்கட்டத்தில் புச்சா படுகொலை போன்ற பல பயங்கரங்கள், போர் குற்றங்கள் வெளிப்பட்டன.
ஆனால் இப்போது, படையெடுப்பின் போது உக்ரேனியர்களை கற்பழிக்க ரஷ்ய வீரர்கள் தூண்டப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அதிகாரி ஒருவர், "இராணுவ மூலோபாயத்தின்" ஒரு பகுதியாக உக்ரேனியர்களை பாலியல் ரீதியாகத் தாக்கும் வகையில், ரஷ்யா தனது சிப்பாய்களுக்கு போதைப்பொருட்களை வழங்குவதாகக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உக்ரைனில் பொதுமக்களை கற்பழிக்க ரஷ்ய வீரர்களுக்கு வயாகரா வழங்கப்படுகிறது.
போரில் பாலியல் வன்முறை தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் இந்த அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.
ரஷ்யா-உக்ரைன் போரின் அதிர்ச்சியூட்டும் கொடூரங்களைப் பற்றி பேசுகையில், படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை ஐநா பதிவு செய்துள்ளது என்று பட்டன் மேலும் கூறினார். பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமல்ல, ஆண்களும் சிறுவர்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.