ரஷ்யாவுடன் 6.5 பில்லியன் டொலர் ஒப்பந்தம்: இந்தியாவுக்காக தயாராகும் 120 ரயில்கள்
இந்தியாவுக்காக 120 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரஷ்ய நிறுவனம் 6.5 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
ரஷியாவின் மிகப்பெரிய ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில் உபகரணங்களை உற்பத்தி செய்யும் டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் (Transmashholding-TMH) நிறுவனம், இந்திய ரயில்வேவுக்காக 120 வந்தே பாரத் விரைவு ரயில்களை தயாரித்து, விநியோகித்து மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை வென்றுள்ளது என்று ரஷ்ய செய்தி நிறுவனமான TASS திங்கள்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்துள்ளது.
16 பெட்டிகள் கொண்ட நீண்ட தூர ரயில்கள், நீண்ட தூர வழித்தடங்களில் மீண்டும் ரயில் சேவையை இயக்குவதற்கான வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அவை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என கூறப்படுகிறது.
Vande Bharat
ஒப்பந்தத்தின் விதிமுறைகள் ஜூன் 1-ஆம் திகதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை இருக்கலாம். அதில் வந்தே பாரத் ரயில்களை வழங்குவதற்கு 1.8 பில்லியன் டொலர் மற்றும் 35 ஆண்டுகளுக்கு அவற்றின் பராமரிப்புக்காக 2.5 பில்லியன் டொலர் செலுத்த வேண்டும்.
Vande Bharat
இந்த ரயில்களின் டெலிவரி 2026 முதல் 2030 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முதல் இரண்டு முன்மாதிரிகள் 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் சோதனைக்கு தயாராகிவிடும்.