நள்ளிரவில் ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 7 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் நேற்று நள்ளிரவில் ரஷ்யா சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை இரவு 147 ட்ரோன் தாக்குதல்களை உக்ரைனில் நடத்தியுள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்தனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ், கார்கிவ், சுமி, செர்னிஹிவ், ஓடேசா மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகள் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் கீவில் மட்டும் நடந்த ட்ரோன் தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். குறைந்த உயரத்தில் பறந்த ட்ரோன்கள் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மேல் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமாதானம் குறித்து சந்தேகம்
இந்த தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும்போது, சவூதி அரேபியாவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. கருங்கடலில் அத்துமீறல்கள் நிற்கும் வகையில் ஒரு உடன்படிக்கை உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் உக்ரைன் குடிமக்கள் இதை நம்ப மறுக்கின்றனர். ரஷ்யா எந்த உடன்படிக்கையையும் மதிக்காது என்று கூறுகின்றனர்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "புதிய தீர்வுகள் தேவை, மேலும் மாஸ்கோ மீது அழுத்தம் அதிகரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |