உக்ரைனை சுற்றி வளைத்த 54 காமிகேஸ் ட்ரோன்கள்: நள்ளிரவில் ரஷ்யா நிகழ்த்திய சதி திட்டம்
உக்ரைனிய தலைநகர் கீவ்வை சுற்றி நேற்றிரவு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷ்ய ராணுவம் கட்டவிழ்த்து உள்ளது.
ட்ரோன் தாக்குதல்
உக்ரைனிய நகரங்களில் நேற்றிரவு மீண்டும் ரஷ்ய ராணுவம் மிகப்பெரிய காமிகேஸ் ட்ரோன்கள் தாக்குதலை நடத்தியுள்ளது, இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பெண்மணி ஒருவர் காயமடைந்துள்ளார்.
கிட்டத்தட்ட 54 காமிகேஸ் ட்ரோன்களை(kamikaze drones) ரஷ்ய ராணுவம் தாக்குதலுக்காக அனுப்பிய நிலையில், 52 ட்ரோன்களை உக்ரைனிய ராணுவம் சுட்டு வீழ்த்தி இருப்பதாக் உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
Kyiv Mayor Klitschko reported the most massive night attack on the city since the beginning of the war. It took place in several waves, and the air raid lasted more than five hours.
— NEXTA (@nexta_tv) May 28, 2023
At least one person died as a result of the attack, information on the number of victims is being… pic.twitter.com/HRLIRrc8Cf
இதில் 40 ட்ரோன்கள் தலைநகர் கீவ்வில் மட்டும் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய ராணுவத்தின் இந்த நள்ளிரவு தாக்குதல் தொடர்பாக பேசிய கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ, பெட்ரோல் நிலையத்தின் அருகே விழுந்த சிதைந்த ட்ரோன் பாகங்களால் ஆண் ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான இன்று உக்ரைனின் 12 பகுதிகளில் வான் தாக்குதலுக்கான ஆபாய சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளன.
Reuters
பொதுமக்களுக்கு அறிவுரை
கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போர் நடவடிக்கை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா அடுக்கடுக்கான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் பாதுகாப்பான தங்குமிடங்களில் இருக்க வேண்டும் என்று கிளிட்ச்கோ கிய்வ் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
Not in Ukraine these days, but got up to see a lot of messages from my friends in Kyiv about “the loud night.” It was the biggest kamikaze drone attack on ?? . 52 of 54 drones were shot down. A man, 41, was killed, at least two more civilians were wounded. #StopRussia pic.twitter.com/aCewA4Pzhe
— Iuliia Mendel (@IuliiaMendel) May 28, 2023
அத்துடன் ரஷ்ய ராணுவத்தின் அடுக்கடுக்கான ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் கடுமையான இரவுகள் வர இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் கீவ் அதிகாரிகள் தெற்கு ஹோலோசியிவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள கிடங்குகள் தீப்பிடித்து எரிவதாகவும் தெரிவித்துள்ளனர்.