டார்ஸ் கப்பல் ஏவுகணைகள் வேண்டும்! உக்ரைன் முன்வைக்கும் மிகப்பெரிய கோரிக்கை
டாரஸ் கப்பல் ஏவுகணை வழங்குமாறு ஜேர்மனியிடம் உக்ரைன் கோரிக்கை முன்வைத்துள்ளது.
உக்ரைனுக்கு வழங்கப்படும் குறுகிய தூர ஏவுகணைகள்
ரஷ்யாவிற்கு எதிரான சண்டையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் பல்வேறு வகையான ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றனர்.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் சமீபத்தில் முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக நாடுகளிடம் இருந்து கூடுதலான ஆயுத உதவியை உக்ரைனுக்கு கொண்டுவந்தார்.
EPA
இருப்பினும் ரஷ்யாவின் சர்வதேச எல்லைகளை கடந்து உக்ரைன் தாக்குதல் நடத்தி விடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக நீண்ட தூர ஏவுகணைகளை வழங்காமல் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குறைந்து தூர இலக்குகளை தாக்கக்கூடிய ஆயுதங்களையே உக்ரைனுக்கு வழங்கி வருகின்றனர்.
உக்ரைன் கோரிக்கை
இந்நிலையில் டார்ஸ் கப்பல் ஏவுகணைகளை( Taurus cruise missiles) வழங்குமாறு உக்ரைன் அதிகாரிகள் ஜேர்மனியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். உக்ரைனின் இந்த கோரிக்கையை சனிக்கிழமையான இன்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
Getty Images
இது தொடர்பாக பேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், உக்ரைனின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பதை விளக்காமல், சில தினங்களுக்கு முன்பு டார்ஸ் கப்பல் ஏவுகணை தொடர்பான உக்ரைனின் கோரிக்கையை ஜேர்மனி பெற்றது என்பதை தெரிவித்தார்.
இத்தகைய நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணை வழங்குமாறு உலக நாடுகளிடம் உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Philipp Hayer/Wikimedia Commons