ஜெலன்ஸ்கியின் சொந்த ஊர் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்
உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊர் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெலன்ஸ்கியின் சொந்த ஊர் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊர் Kryvyi Rih. இன்று அதிகாலையில் ரஷ்ய ஏவுகணைகள் Kryvyi Rih நகரை சரமாரியாகத் தாக்கியுள்ளன.
AP
இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் பற்றியெரிந்துள்ளன. ஆறு முதல் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், ஏழு பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
REUTERS
ஜெலன்ஸ்கி தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் எரிந்த நிலையிலிருக்கும் கட்டிடங்களையும், இறந்தவர்களின் உடல்களை மீட்புக் குழுவினர் சுமந்து செல்லும் காட்சிகளையும் காணலாம்.
REUTERS
THE STATE EMERGENCY SERVICE OF U/AFP via Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |