சண்டை முடிந்து வெளியேறும் உக்ரைன் வீரர்கள்! ரஷ்யாவுக்கு மிகப்பெரிய இழப்பு: பிரித்தானிய MOD தகவல்
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியதில் இருந்து இதுவரை 10,000+ இராணுவ வாகனங்களை அந்த நாடு இழந்து இருப்பதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பக்முட் நகரில் இருந்து வெளியேறிய உக்ரைன் வீரர்கள்
உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான பக்முட்டில் பல மாதங்களாக சண்டை நீடித்து வந்த நிலையில், அந்த பகுதியில் இருந்து தற்போது உக்ரைனிய ராணுவ வீரர்கள் சண்டை முடிந்து வெளியேறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யப் படைகள் பக்முட் நகரைக் கைப்பற்றுவதற்காக எட்டரை மாதப் பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருந்தனர்.
Russia has lost 10,000+ military vehicles since its illegal invasion of Ukraine began, according to tracker Oryx. It has also fired most of its modern cruise missiles- for little strategic gain.
— Ministry of Defence ?? (@DefenceHQ) April 15, 2023
Russia is now scrambling to mobilise its defence industry
?? #StandWithUkraine?? pic.twitter.com/f95chqstFP
இதுவரை நடந்த தாக்குதலில் மிக நீண்ட போர் மையமாக இந்த நகரம் இருந்துள்ளது.
10,000+ ரஷ்ய ராணுவ வாகனங்கள்
இந்நிலையில் பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா 10,000 க்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்களை இழந்துள்ளது என தெரிவித்துள்ளது.
Sky News
மேலும் ரஷ்யா தனது சிறிய மூலோபாய ஆதாயத்திற்காக அதன் பெரும்பாலான நவீன கப்பல் ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளது என்றும் பிரித்தானிய MOD தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யா இப்போது அதன் பாதுகாப்பு துறையை அணி திரட்ட துடிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sky News