ரஷ்யா திட்டமிடும் அடுத்த தாக்குதல் - ஒரே நேரத்தில் 2,000 ட்ரோன்கள்: ஜேர்மன் ஜெனரலின் எச்சரிக்கை
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது.
சமீபத்தில் ஜூலை 8-9 திகதியில் மட்டும் 741 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஒன்றாக ஏவப்பட்டன.
இந்நிலையில், ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி மேஜர் ஜெனரல் கிறிஸ்தியான் ஃப்ராய்டிங் () வெளியிட்டுள்ள அதிர்ச்சி எச்சரிக்கை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நேரத்தில் 2,000 ட்ரோன்கள் தாக்கும் சாத்தியம்
ரஷ்யா தற்போது ட்ரோன் உற்பத்தி திறனைக் கடுமையாக அதிகரித்து வருகிறது. இது ஒரே நேரத்தில் 2,000 ட்ரோன்கள் தாக்க வாய்ப்பு உள்ளதென அவர் கூறியுள்ளார். \
இது உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறைந்த செலவில் அதிக பாதிப்பு
ஈரான் வழங்கும் Shahed ட்ரோன்கள் வெறும் 30,000 - 50,000 யூரோ மதிப்பிலேயே இருக்கின்றன. ஆனால் அவைகளை அழிக்க பயன்படுத்தப்படும் Patriot ஏவுகணைகளின் விலை 5 மில்லியன் யூரோவிற்கு மேல். இது உக்ரைனுக்குப் பாரிய பொருளாதார சுமையைக் கொடுக்கிறது.
புதிய பாதுகாப்பு தேவை
உக்ரைன் தற்போது சாதாரண துப்பாக்கிகள், எதிர்ப்பு ட்ரோன்கள், மற்றும் மின்னணு போர்கருவிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைனுக்கு 2,000 - 4,000 யூரோ செலவில் செயல்படக்கூடிய பாதுகாப்பு அமைப்புகள் தேவை என ஜேர்மன் ஜெனரல் கூறியுள்ளார்.
ரஷ்யா தற்போது உக்ரைனின் பாதுகாப்பு சப்ளைகளை சோர்வடையச் செய்கிறது. இது உக்ரைனின் எதிர்வினையை எதிர்பார்த்தும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகவே இருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia drone attack Ukraine 2025, 2000 drones Russia Ukraine, Ukraine air defence crisis, Iranian drones in Ukraine war, Patriot missile vs Shahed drone, Ukraine drone war update, German general Ukraine warning, Russia mass drone attack plan, Vladimir Putin war strategy, NATO air defence Ukraine