பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தை கேலி செய்யும் ரஷ்யா- அமெரிக்காவுக்கும் ஒரு உள்குத்து
பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்த ஒரு கருத்தை மறைமுகமாக கேலி செய்த ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர், அதை அமெரிக்காவை விமர்சிப்பதற்காகவும் பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்த கருத்து ரஷ்ய ஜனாதிபதி புடின், பெலாரஸ் நாட்டில் தனது அணு ஆயுதங்களை சேமித்துவைப்பதற்கான சேமிப்பகங்களை உருவாக்கி வருகிறார்.
சீனா சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து விமர்சித்தார்.
உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என பிரான்ஸ் நம்புவதாகத் தெரிவித்தார் அவர். அத்துடன், ஒரு அணு ஆயுத நாட்டின் அணு ஆயுதங்கள், அந்த நாட்டின் எல்லைக்கு வெளியே வேறொரு நாட்டில் நிறுவப்படக்கூடாது, குறிப்பாக ஐரோப்பாவில் என்றார் மேக்ரான்.
ரஷ்ய அமைச்சகம் கேலி !
பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தை மறைமுகமாக கேலி செய்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Maria Zakharova, ட்விட்டரில் அது தொடர்பாக ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். '
? Quote. President of France @EmmanuelMacron said: No country can deploy nuclear weapons on foreign territory “under any circumstances.”
— MFA Russia ?? (@mfa_russia) April 6, 2023
? Russian MFA Spokeswoman Maria Zakharova: Am I correct in understanding that Paris’s tough demand is addressed to Washington? ? pic.twitter.com/b6xA3ZQbwH
அந்த ட்வீட்டில், பிரான்ஸின் கடினமான இந்த கோரிக்கை அமெரிக்காவுக்கானது என நான் புரிந்துகொண்டுள்ளது சரிதானே? என்று குறிப்பிட்டுள்ளார் Maria.
விடயம் என்னவென்றால், அமெரிக்கா தனது அணு ஆயுதங்கள் சிலவற்றை ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் நிறுவியுள்ளது.
ஆக, அமெரிக்கா இப்படி செய்திருக்கும் நிலையில், பிரான்ஸ் ரஷ்யாவிடம் மற்ற நாடுகளில் அணு ஆயுதங்களை நிறுவக்கூடாது என கோரியுள்ளதை கேலி செய்துள்ளார் Maria.
அத்துடன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அணு ஆயுதங்கள் நிறுவியிருப்பதைக் காட்டும் படங்களையும் வெளியிட்டுள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மீதான தன் வெறுப்பை வெளிக்காட்டிக்கொள்ளவும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது.