இன்னொரு அணையை சேதப்படுத்தும் ரஷ்யா: அம்பலப்படுத்திய உக்ரைன்
உக்ரைன் துவங்கியுள்ள எதிர் தாக்குதலை தாமதப்படுத்துவதற்காக ரஷ்யா மற்றொரு அணையை சேதப்படுத்துவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்
உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ககோவ்கா நீர்மின் நிலையம் சேதமானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஏழாவது நாளை எட்டியுள்ளன.
@AFP
குறித்த அணையானது ரஷ்ய தரப்பால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, உக்ரைன் தரப்பின் எதிர் தாக்குதலை முறியடிக்கும் பொருட்டு இன்னொரு நீர் தேக்கத்தை சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்லது.
இதனால் Mokri Yaly நதியின் இருகரையிலும் வெள்ளம் கரைபுரண்டுள்ளதாக கூறுகின்றனர். Klyuchove கிராமத்தில் அமைந்துள்ள அந்த நீர் தேக்கமானது சேதமடைந்துள்ளதாக கூறப்படும் தகவலை இதுவரை உறுதி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.
@getty
ககோவ்கா அணையை பொறுத்தமட்டில் ஒரு மணி நேரத்திற்கு 5 சென்டிமீற்றர் வேகத்தில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவில் 72%க்கும் அதிகமான, 14,395 கன கிலோமீற்றர் நீர், ஏற்கனவே வீணானதாகவும் கூறியுள்ளனர்.
உக்ரைனின் சுற்றுச்சூழல் அமைச்சர் Ruslen Strilets தெரிவிக்கையில், அணை சேதப்படுத்தப்பட்டதும் நீர் வீணான போதிலும் நீர்மின் நிலையத்திற்கு தேவையான தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.