ரஷ்யாவுடன் இணையும் நாடுகளுக்கு அணு ஆயுதம்: பெலாரஸ் ஜனாதிபதி பகீர் தகவல்
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுடன் கைகோர்க்கும் அனைத்து நட்பு நாடுகளுக்கும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை வழங்குவார் என பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் கைகோர்த்தால் அணு ஆயுதம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் இருந்து ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக பெலாரஸ் திகழ்ந்து வருகிறது.
போர் 15 மாதங்களை எட்டிவிட்ட நிலையிலும் ரஷ்யாவின் தாக்குதல் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறாததால் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் வெளியிட்ட அறிவிப்பின் படி, பெலாரஸ் நாட்டில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான சேமிப்பு கிடங்கு நிறுவுவதற்கான புதிய ஒப்பந்தத்தில் இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.
AP
இந்நிலையில் ரஷ்ய பிரச்சாரகர் பாவெல் ஸருபி-யிடம் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ வழங்கிய நேர்காணலில், ரஷ்யா மற்றும் பெலாரஸின் "யூனியன் ஸ்டேட்" ஒப்பந்தத்தில் ஏதேனும் நாடுகள் இணைந்தால் அவர்களுக்கான அணுஆயுதங்கள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது மிகவும் எளிமையானது, ரஷ்யாவுடனான பெலாரஸ் ஒன்றியத்தில் நாடுகள் இணைந்தால் போதும், அனைவருக்கும் அணுஆயுதங்கள் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் உண்மை பலம்
பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுவது என்பது அந்த நாட்டை ரஷ்யா பயன்படுத்துகிறது என்று அர்த்தம் அல்ல, அதற்கு மாறாக அணு ஆயுத போர் பற்றிய கவலையை அதிகரிக்க செய்து தனக்கான சாதகமாக பயன்படுத்துவது என்று போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் மூத்த டாக்டர் ஃபிராங்க் லெட்விட்ஜ் தெரிவித்துள்ளார்.
TASS via Getty Images
புடின் இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் ரஷ்யா ஒரு அணு ஆயுத நாடு என்பதை மேற்கத்திய நாடுகளுக்கு நினைவுப்படுத்தும் செயல் என்றும், உக்ரைனின் தெற்கு பகுதியில் தற்போது நடப்பது ரஷ்யாவின் முழு பலம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.