நள்ளிரவில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்: உக்ரைனின் மற்றொரு நகரை குறி வைக்கும் ரஷ்யா
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில், உக்ரைனின் டினிப்ரோ என்ற நகரின் மீது, ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படை, சில தினங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் முக்கிய நகரான பாக்முட் முழுவதையும் கைப்பற்றியதாக அறிவித்தது.
@skynews
இதனை தொடர்ந்து அந்த நகரின் கட்டிடங்கள் மற்றும் பொது இடங்கள், முழுவதும் ரஷ்ய ராணுவத்தினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளானது.
மற்றொரு நகரை மீது தாக்குதல்
இந்நிலையில் உக்ரைனின் தென்கிழக்கு பகுதியான டினிப்ரோ நகரின் மீது, நேற்று இரவு ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
@skynews
ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம், டினிப்ரோ நகரின் 15 இடங்கள் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதனிடையே டினிப்ரோபெட்ரோவிஸ்க் மாகாணத்தின் ஆளுநரான சேர்ஹி லய்ஷாக் ‘ உக்ரைன் ராணுவத்தினருக்கு நன்றி, நாம் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து போராட வேண்டும்’ என தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
@skynews
இந்நிலையில் உக்ரைனின் பிரித்தானிய தூதர் கிய்வ் நகரில், நடைபெற்ற ராணுவ தாக்குதலை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
?? threw more missiles at #Kyiv last night. More broken nights aren’t going to change ?? support for ??.
— Dame Melinda Simmons (@MelSimmonsFCDO) May 22, 2023
மேலும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி கூடுதல் தகவல்கள் இன்னும் சரியாக கூற முடியவில்லை என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததுள்ளது.