உக்ரைனின் எதிர் தாக்குதலை முறியடிக்க ரஷ்யாவின் பயங்கர திட்டம்
உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்தில் போலியான விபத்தினை ஏற்படுத்தி, பழியை உக்ரைன் மீது சுமத்தும் திட்டத்தை ரஷ்யா வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணுமின் நிலையம் மீது தாக்குதல்
Zaporizhzhia அணுமின் நிலையமானது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தென்பகுதி உக்ரைனில் அமைந்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் என கூறப்படும் இப்பகுதியானது இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் வகையில் ஷெல் தாக்குதல்களை மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது.
@getty
இந்த நிலையில், உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் Andrii Yusov தெரிவிக்கையில், ரஷ்யப் படைகள் விரைவில் அணுமின் நிலையம் மீது ஷெல் தாக்குதலை முன்னெடுப்பதுடன் ஒரு பெரிய கதிர்வீச்சு கசிவை அறிவிக்கும் என்றார்.
அதற்கான ஆயத்தங்களை ரஷ்யா முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உக்ரைன் மீது பழி சுமத்தும் திட்டம் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதற்கான உக்ரேனிய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளைத் தடுப்பதே ரஷ்யர்களின் முக்கிய குறிக்கோள் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிரிகள் ஒருங்கிணைக்க வாய்ப்பாக
அத்துடன் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் விரிவான விசாரணையை நடத்த சர்வதேச சமூகத்தை தூண்டுவதே இதன் நோக்கமாகும், இதன் போது அனைத்து வகையான எதிர் தாக்குதலும் நிறுத்த கோரிக்கை வைக்கப்படலாம் என்றார்.
இந்த கால அவகாசம் எதிரிகள் மீண்டும் ஒருங்கிணைக்க வாய்ப்பாக பயன்படுத்தலாம். மட்டுமின்றி உக்ரேனிய எதிர் தாக்குதலை தடுத்து நிறுத்தும் பயங்கர சதி திட்டம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.