4,500 கிமீ நீளத்திற்கு அதிவேக ரயில் திட்டத்தை அறிவித்த ரஷ்யா
ஐரோப்பாவின் மிகப்பெரிய அதிவேக ரயில் திட்டத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய பிரதமர் Mikhail Mishustin, 4,500 கிலோமீற்றர் நீளமுள்ள புதிய அதிவேக ரயில் திட்டத்தை அறிவித்துள்ளார். இது ஐரோப்பாவில் மிகப்பெரிய அதிகவேக ரயில் நெட்வொர்க் ஆகும்.
இந்த ரயில்கள் ரஷ்யாவின் தயாரிக்கப்படவுள்ளன மற்றும் 400 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியவை.
மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் தற்போது 4 மணிநேரமாக இருக்கிறது. இந்த புதிய ரயில் சேவையின் மூலம் 2 மணிநேரமாக குறைக்கப்படும்.
மேலும், மாஸ்கோ நகரம் Minsk, Adler (Black Sea), Ekaterinburg (Urals), Ryazan மற்றும் பல நகரங்களுடன் இணைக்கப்படும்.
இத்திட்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். முதல் கட்டமாக மாஸ்கோ-செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இடையிலான 679கிமீ பாதையில் கட்டுமானம் தொடங்கியுள்ளது.
இந்த திட்டம் ரஷ்யாவின் உள்நாட்டு போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia 4500km High speed rail network, Russia High speed rail network, Moscow to St.Petersburg fast train