போரை தீவிரப்படுத்தும் புடின்: பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் ரஷ்யா
உக்ரைனில் போர் நீடித்து வரும் நிலையில், பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா தயாராகி வருகிறது.
பெலாரஸில் சிறப்பு சேமிப்பு வசதிகள் ஜூலையில் தயாரான பிறகு, மூலோபாய அணு ஆயுதங்களை பயன்படுத்தத் தொடங்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய சக்திகளும் அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையில்தான் ரஷ்யா அணு ஆயுதங்களை நிலைநிறுத்துகிறது.
Reuters
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மாஸ்கோவிற்கு வெளியே அணு ஆயுதங்களை நகர்த்துவது இதுவே முதல்முறை.
அமெரிக்க மற்றும் நேட்டோ இராணுவக் கூட்டணிகள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், மூலோபாய அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு மாற்றுவது குறித்து புடின் எச்சரித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு என்றும், அதனால் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உக்ரைனுக்கு உதவுவோம் என்றும் நேட்டோ நாடுகள் தெரிவித்துள்ளன.
Reuters
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடனான சந்திப்பில், இதுவரை அனைத்தும் திட்டமிட்டபடி நடந்ததாக புடின் கூறினார். ஜூலை 7 மற்றும் 8-ஆம் திகதிகளில் வசதிகள் தயாராகிவிடும்.
Reuters
கடந்த ஆண்டு, உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக புடின் மிரட்டியதைத் தொடர்ந்து, பெலாரஸ் அணு ஆயுதம் இல்லாத நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்யும் அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் பெலாரஸில் ரஷ்ய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு இருந்த தடை நீங்கியது. பெலாரஸ் எல்லையில் இருந்து வரும் ஏவுகணை வரம்பில் உக்ரைன் தலைநகர் கீவும் அடங்கும்.
Ukraine, Russia, Vladimir Putin, Belarus, War, Nuclear Weapon