அமெரிக்கா செய்தது சட்ட விரோதமான கடத்தல்! வெனிசுலாவுடன் துணை நிற்போம்: ரஷ்யா உறுதி
வெனிசுலா உடனான உறவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வெனிசுலா மீதான அமெரிக்கா நடவடிக்கை
வெனிசுலா தலைநகர் காரகாஸ் மீது தாக்குதல் நடத்தியதோடு, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகிய இருவரை நாடு அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது.

மேலும் வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் அறிவித்தது சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா ஆதரவு
இந்நிலையில் வெனிசுலா உடனான அனைத்து விதமான மூலோபாய கூட்டணியும் தொடரும் என்று ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
வெனிசுலா வெளியுறவுத்துறை அமைச்சர் இவான் கில் பிண்டோ மற்றும் ரஷ்யத் தூதர் செர்ஜி மெலிக்-பாக்தசராவ் இடையிலான சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் சட்டவிரோதமான செயலுக்கு எதிராக இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட போவது குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் இருவரும் அமெரிக்காவால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு இருப்பதாகவும் ரஷ்ய தூதர் குற்றம் சாட்டியுள்ளார்.
வெனிசுலா தலைநகர் காரகாஸ் மீது அமெரிக்க நடத்திய தாக்குதலின் போது குறைந்தது 100 பேர் வரை கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |