ஒரே ஆண்டில் 4.5 லட்சம் ராணுவ வீரர்களை சேர்த்த நாடு: தீவிரமடையும் போர் நடவடிக்கை
கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 4.5 லட்சம் புதிய வீரர்கள் ரஷ்யா ராணுவத்தில் சேர்த்துள்ளது.
ஒரே ஆண்டில் 4.5 லட்சம் வீரர்கள்
ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் வழங்கிய தகவலின் படி, கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் ரஷ்ய ராணுவத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

தரவுகளின் படி, சுமார் 4,22,000 க்கும் மேற்பட்டோர் ரஷ்ய ராணுவத்தில் சேருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக டிமிட்ரி மெத்வதேவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதே சமயம் இதில் வழக்கமான ஒப்பந்த வீரர்களுடன் தன்னார்வலர்களும் அடங்குவர் என்று டிமிட்ரி மெத்வதேவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிகரிக்கும் துருப்புகளின் எண்ணிக்கை
உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் போரின் முன்கள வரிசையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

உக்ரைனிய உளவுத் துறையின் மதிப்பீட்டு படி, தற்போது போர்க்களத்தில் கிட்டத்தட்ட 7 லட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய இந்த போர் நடவடிக்கையில் பெரிய எண்ணிக்கையில் ராணுவ வீரர்கள் முதல் முறையாக குவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |