உக்ரைனில் மேலும் 2 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா
கிழக்கு உக்ரைனில் மேலும் இரண்டு கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிலத்தை கைப்பற்ற முயற்சி
உக்ரைன்-ரஷ்யா இடையிலான சண்டை தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகப்போகிறது.
இரு தரப்பிலும் சாத்தியமான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக நிலத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
இந்த நிலையில், உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள நோவோம்லின்ஸ்க் கிராமத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.
மாஸ்கோ துருப்புகள்
அங்கு இரு படைகளையும் பிரித்த ஆஸ்கில் நதியை ரஷ்யாவின் படைகள் கடந்துவிட்டன.
அதேபோல் பல மாதங்களாக முன்னேறி வரும் மாஸ்கோ துருப்புகள், Ocheretyne நகருக்கு வடக்கே உள்ள பரனிவ்காவையும் கைப்பற்றியுள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு உக்ரைனில் கிட்டத்தட்ட தினசரி வெற்றிகளை ரஷ்யா பெற்றுவதாகவும் கூறுகிறது.
![russia-said-captures-2-villages-in-eastern-ukraine russia-said-captures-2-villages-in-eastern-ukraine](https://cdn.ibcstack.com/article/5c809a85-fdd4-45ed-b1d4-9862b296184e/25-67a36553ac58f.webp)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |