உக்ரைனின் எல்லைப்பகுதி கிராமத்தைக் கைப்பற்றிய ரஷ்யா
உக்ரைனின் சுமி பகுதியில் ஒரு கிராமத்தைக் கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமி பகுதி
2022ஆம் ஆண்டு போரின் ஆரம்ப நாட்களுக்குப் பிறகு, முதல் முறையாக சுமி பிராந்திய கிராமத்தைக் கைப்பற்றியதாக மார்ச் மாத தொடக்கத்தில் ரஷ்யா கூறியது.
அத்துடன் பாசிவ்காவில் இருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள நோவென்கேவை துருப்புகள் கைப்பற்றியதாகவும் கூறியது.
மேலும், மார்ச்சில் ரஷ்யப் படைகள் எல்லையைத் தாண்டியதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார். இது சுமி பகுதியைக் குறிக்கிறது என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கிராமத்தைக் கைப்பற்றியதாக ரஷ்யா
இந்நிலையில், அரிதான எல்லை தாண்டிய முன்னேற்றத்தில் உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைக் கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
ஆனால், உக்ரைன் தனது எல்லைக்குள் நுழைய முயன்ற ரஷ்ய வீரர்களின் சிறிய குழுக்களின் முயற்சிகளைத் தனது துருப்புக்கள் முறியடிப்பதாகக் கூறியது.
கடந்த ஆகத்து மாதம், உக்ரைனின் துருப்புக்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊடுருவின, ஆனால் மாஸ்கோ சமீபத்தில் இந்தப் பிரதேசத்தின் பெரும்பகுதியை மீட்டெடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |