புடின் - டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை எப்போது? ரஷ்யா வழங்கியுள்ள முக்கிய தகவல்
ரஷ்ய ஜனாதிபதி புடினும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் எப்போது வேண்டும் என்றாலும் பேசலாம் என்று ரஷ்யா விளக்கியுள்ளது.
புடின் - டிரம்ப் பேச்சுவார்த்தை
எந்தவொரு முன் ஏற்பாடுகளும் இல்லாமல் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் பேசிக் கொள்வார்கள் என ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு எந்தவொரு ஏற்பாடுகளும் தேவையில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இருதரப்பிற்கும் தேவைப்படும் போது பேச்சுவார்த்தை உடனடியாக திட்டமிட்டு நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களும் கடைசியாக ஜூலை 4ம் திகதி தொலைபேசி வாயிலாக முக்கிய உரையாடலை நடத்தினர்.
அந்த அழைப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை மாஸ்கோவிற்கு வருமாறு ரஷ்ய ஜனாதிபதி புடின் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |