வாழைப்பழக் கப்பலில் மறைத்து.,1316 கோடி மதிப்பு போதைப்பொருள்! பறிமுதல் செய்த ரஷ்ய அதிகாரிகள்
ரஷ்ய சுங்க அதிகாரிகள் கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 153 மில்லியன் மதிப்புள்ள கோகோயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
820 கிலோகிராம் கோகோயின்
ரஷ்யா கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்களை அமுல்படுத்துகிறது மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.
இந்த நிலையில், வாழைப்பழக் கப்பலின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 820 கிலோகிராம் கோகோயின் போதைப்பொருளை பறிமுதல் செய்ததாக ரஷ்ய சுங்க அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
இது லத்தீன் அமெரிக்காவில் இருந்து வந்த மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 12 பில்லியன் ரூபிள் (இந்திய மதிப்பில் 1,316 கோடி ருபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
வாழைப்பழக் கொள்கலன்களில் கண்டுபிடிப்பு
FSB பாதுகாப்பு சேவையின் உதவியுடன் வாழைப்பழக் கொள்கலன்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய சுங்க சேவை தெரிவித்துள்ளது.
இந்த கோகோயின் பிரெஞ்சு சொகுசு ஃபேஷன் பிராண்டின் Logo உடன் கூடிய briquettesகளில் நிரம்பியிருந்தது. மேலும், பழத்தின் கீழ் ஒரு மறைக்கப்பட்ட குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், 'தென் அமெரிக்க கடத்தல் குழு ஒன்று ரஷ்யாவிற்குள் புதிய கடத்தல் பாதையை நிறுவ முயற்சிப்பது குறித்து, வெளிநாட்டு சக ஊழியர்களிடம் இருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றனர்.
மேலும், இந்த பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கிரெம்ளின் ஆதரவு செய்தித்தாள் Izvestia கூற்றுப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்யாவிற்குள் கோகோயின் கடத்தல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |