உக்ரேனிய சீருடையில் அந்நாட்டு இராணுவ வாகனங்களை கைப்பற்றி தலைநகரை நோக்கி முன்னேறும் ரஷ்யா! சிக்கிய காட்சி
உக்ரேனிய இராணுவ சீருடையில் அந்நாட்டு இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷ்யா துருப்புகள், தலைநகர் Kyiv-ஐ நோக்கி முன்னேறி வருவதாக அந்நாட்டு துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது 2வது நாளாக தாக்குதல் நடத்திய வரும் ரஷ்யா படைகள், தலைநகர் kyiv-ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் இரண்டு இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷ்ய இராணுவ வீரர்கள், உக்ரேனிய இராணுவ சீருடையில் தலைநகர் kyiv-ஐ நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு வாகனங்களை பின்தொடர்ந்து வரிசையாக ரஷ்யா இராணுவ வாகனங்கள் செல்வதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
BREAKING: Ukrainian military vehicles seized by Russian troops wearing Ukrainian uniforms, heading for Kyiv, defense official says - UNIAN pic.twitter.com/9ul5pCuO25
— BNO News (@BNONews) February 25, 2022
இதனிடையே, ரஷ்ய படைகள் இன்று kyiv புறநகரில் நுழைந்து விடும் என பெயர் வெளியிட விரும்பாத மூத்த உக்ரைன் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், உக்ரேனியப் படைகள் நான்கு முனைகளில் அவர்களை எதிர்த்து சண்டையிட்டு வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.