ஈரானுக்கு டூம்ஸ்டே விமானத்தை அனுப்பிய ரஷ்யா., மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் மோதல் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் “டூம்ஸ்டே” விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள்ளது.
இந்த விமானம் சாதாரண VIP விமானம் அல்ல. இது ரஷ்யாவின் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களை ஏற்றிச் செல்லும் Rossiya Special Flight Squadron-க்கு சொந்தமானது.

Tu-214PU, கடுமையான அச்சுறுத்தல்களிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட, பாதுகாப்பான தொடர்பு மற்றும் Command-Control அமைப்புகளுடன் கூடிய 'வானில் பறக்கும் கட்டளை மையம்' ஆகும்.
அமெரிக்கா சமீபத்தில் ஈரானின் ஏவுகணை தளங்கள், ட்ரோன் அமைப்புகள், விமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளது. இதற்கு பதிலளிக்க ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
🇺🇸🇮🇷🇷🇺 Russia just flew their special airborne command post plane straight into Tehran.
— Mario Nawfal (@MarioNawfal) July 13, 2026
This is the Russian version of Air Force One for crisis coordination.
Moscow is clearly rushing to back Iran while the U.S. keeps striking.
Source: @flightradar24 / Writer: Claudio pic.twitter.com/c06156vfcR
இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் “டூம்ஸ்டே” விமானம் தெஹ்ரானில் தரையிறங்கியது, இது ரஷ்யா மற்றும் ஈரான் இடையிலான உயர் மட்ட இராணுவ மற்றும் அரசியல் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.
Tu-214PU, Tu-214 பயணிகள் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும். 1989-இல் முதன்முதலாக பறந்த இந்த விமானம், பல்வேறு சிறப்பு பயன்பாடுகளுக்காக மாற்றப்பட்டுள்ளது. அதில் மிகவும் நவீனமயானது இந்த Tu-214PU விமானம்.
இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதைக் காட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |