ஒரே நாளில் 100 உக்ரைனிய ட்ரோன்கள்: வேட்டையாடிய ரஷ்ய வான் பாதுகாப்பு படை
கிட்டத்தட்ட ஒரே நாளில் 100 உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய வான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் சமீபத்திய நிகழ்வாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இருநாடுகளும் மாறி மாறி சரமாரியாக தாக்கி கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், திங்கட்கிழமை மட்டும் ரஷ்ய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மொத்தம் 97 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தி இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டும் கிட்டத்தட்ட 55 உக்ரைனிய ஆளில்லா ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக திங்கட்கிழமை காலை 42 உக்ரைனிய ஆளில்லா ட்ரோன்கள் ரஷ்ய வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரஷ்யா எதிர் கொண்டு மிகப்பெரிய உக்ரைனிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும்.

பிரதானமாக பிரியான்ஸ்க் பகுதியில் 31 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது, தலைநகர் மாஸ்கோவை நோக்கி வந்த ட்ரோன் ஒன்று வெற்றிகரமாக இடை மறிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில், இந்த ட்ரோன் தாக்குதல் சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த எந்தவொரு தகவலும் குறிப்பிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |