ரஷ்யாவை வேட்டையாட நினைத்த 30 உக்ரைனிய ட்ரோன்கள்: இரவில் நடந்த சண்டை
ரஷ்யா மீது தாக்குதல் நடத்திய 30 உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்
செவ்வாய்க்கிழமை ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களை குறித்து 30க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அத்துமீறிய ட்ரோன்கள் அனைத்தையும் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவின் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் 11 மணி வரை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறிய உக்ரைனிய ட்ரோன்கள் அனைத்தும் எல்லைப்புற நகரங்களான பெல்கோரோட், குர்ஸ்க் மற்றும் ரோஸ்டோவ் ஆகியவற்றை குறி வைத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனின் இந்த திடீர் தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது கட்டிட சேதங்களோ ஏற்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |