உக்ரைனில் ரஷ்யா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: நேரடி ஆய்வில் இறங்கிய புடின்
உக்ரைன் போருக்கான தாக்குதல் வேகத்தை அதிகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய பாதுகாப்பு துறையினரிடம் வெள்ளிக்கிழமை தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
புடின் அவசர ஆலோசனை
உக்ரைன் மீதான போர் தாக்குதல் 10 மாதங்களை கடந்து நீடித்து கொண்டு இருக்கும் நிலையில், ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்து இருந்த நிலப்பரப்பில் தற்போது பாதியை உக்ரைனிய படைகளிடம் விட்டுக் கொடுத்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக வீரர்களின் மனச்சோர்வு மற்றும் ஆயுத பற்றாக்குறை முதற்காரணமாக பார்க்கப்படுகிறது.
image - REUTERS
இந்நிலையில் சமீபத்தில் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி மையமான துலாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி விளாடிமிர் புடின், நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது உக்ரைனில் போரிடத் தேவையான அனைத்து ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் இராணுவ வன்பொருள்களை ரஷ்ய இராணுவம் விரைவாகப் பெறுவதை உறுதிசெய்ய ரஷ்ய பாதுகாப்புத் துறை தலைவர்களிடம் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவுறுத்தினார்.
அத்துடன் ரஷ்ய ராணுவம் உக்ரேனில் தான் அனுபவித்த பிரச்சனைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதன் 10வது மாத இறுதியில் ஒரு போரை நடத்துவதற்கு தேவையான அனைத்தையும் தருவதாகவும் ஜனாதிபதி புடின் குறிப்பிட்டுள்ளார்.
image - REUTERS
புடின் ஆய்வு
ஆயுத உற்பத்தி மையமான துலாவிற்கு வெள்ளிக்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி விளாடிமிர் புடின், அங்குள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை நேரடியாக ஆய்வு செய்தார்.
ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்த புடின், திடீரென டாங்கி வாகனம் மீது ஒன்றில் ஏறி ஆய்வு மேற்கொண்டார்.
ரஷ்ய ஊடகங்களால் வெளிவந்துள்ள இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.