சீறிப்பாய்ந்த 130 உக்ரைனிய ட்ரோன்கள்: பெலகோரி கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா
ரஷ்யாவிற்குள் அத்துமீறி நுழைந்ததாக சொல்லப்படும் 130 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
தீவிரமடையும் தாக்குதல்
அமெரிக்காவின் போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் தீவிரமாக இறங்கி இருந்தாலும் சமீப காலத்தில் ரஷ்யா மீதான தாக்குதலை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது.
அதே சமயம் ரஷ்யாவும் உக்ரைனுக்குள் தங்களது ஆக்கிரமிப்புகளை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாகவும், உக்ரைனின் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை இடைமறித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 130 ட்ரோன்கள்
மேலும் ரஷ்ய பாதுகாப்பு பகுதிகளுக்குள் நுழைய முயன்ற 130 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய படைகளின் ஒருங்கிணைந்த தாக்குதல் முயற்சி இது என்று விவரித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், ட்ரோன்கள் தடுத்து நிறுத்தப்பட்ட இடம் குறித்து எந்தவொரு தகலையும் வெளியிடவில்லை.
❗️Russian troops have liberated the village of Belogorye in the Zaporizhzhia region, the Russian Ministry of Defense reported. pic.twitter.com/z5cMF4ckSE
— Levan Gudadze (@GudadzeLevan) January 11, 2026
உக்ரைனிய கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா
ரஷ்யாவின் ட்னிப்ரோ படை பிரிவினர் தென் கிழக்கு உக்ரைனின் Zaporizhzhia பிராந்தியத்தில் உள்ள பெலகோரி கிராமத்தை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
நகரை கைப்பற்றும் முயற்சியின் போது கிட்டத்தட்ட 290 உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்றும், 18 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |