ரஷ்யா விடுத்த மிரட்டல்... வரலாறு காணாத உச்சத்தில் கோதுமை விலை
உக்ரைன் துறைமுகம் நோக்கி நகரும் கப்பல்களை இலக்கு வைப்போம் என ரஷ்யா விடுத்த மிரட்டலை அடுத்து சர்வதேச சந்தையில் கோதுமை விலை உச்சம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலுக்கட்டாயமாக வெளியேறிய ரஷ்யா
கருங்கடல் ஊடாக தானிய கப்பல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற ஒப்பந்தத்தில் இருந்து இந்த வாரம் ரஷ்யா வலுக்கட்டாயமாக வெளியேறியது.
@bbc
ஆனால் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், அடுத்த சில மணி நேரத்தில், தொடர்புடைய ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள தாம் தயார் என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யாவின் வேளாண் வங்கி சேவையை உலகளாவிய கட்டண முறையுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கையையும் ரஷ்யா முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையாந்து தற்போது ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என ஐரோப்பிய ஒன்றியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் துறைமுக நகரமான மைகோலேவ் மீது புதன்கிழமை இரவு ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
60,000 டன் தானியங்கள் அழிப்பு
இந்த நிலையில், கருங்கடல் பகுதியில் உள்ள எஞ்சிய நாடுகளும் சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதிசெய்ய தலையிடுமாறு உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் துறைமுகப்பகுதிக்கு செல்லும் அனைத்து கப்பல்களும் ராணுவ தளவாடங்களுடன் பயணப்படுவதாகவே இனிமுதல் கருதப்படும் என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.
@epa
இந்த நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தையில் கோதுமை விலை புதன்கிழமை 8.2% உயர்ந்தது. டன் ஒன்றிற்கு 219.78 பவுண்டுகள் என இருந்த விலை தற்போது உயர்ந்துள்ளது. இதேவேளை அமெரிக்க கோதுமை விலை புதன்கிழமை 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது. சோளத்தின் விலை 5.4% உயர்ந்துள்ளது.
இதனிடையே, ரஷ்யாவின் கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதலால், இதுவரை 60,000 டன் தானியங்கள் அழிக்கப்பட்டுள்ளது அல்லது சேதமடைந்துள்ளது என உக்ரைன் வேளாண் அமைச்சர் Mykola Solskyi தெரிவித்துள்ளார்.
தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய சில மணி நேரங்களிலேயே ரஷ்யா செவ்வாய்க்கிழமை அதிகாலை உக்ரைனின் துறைமுகங்களை குறிவைக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |