போர் நிறுத்தம்! அதிரடியாக அறிவித்த புடின்... நிராகரித்த உக்ரைன்
இரண்டு நாட்களுக்கு போர் நிறுத்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்ட நிலையில் உக்ரைன் நிராகரித்திருக்கிறது.
இரண்டு நாட்கள் போர் நிறுத்தம்
ரஷ்யாவில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார்.
இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் விடுத்துள்ள அறிவிப்பில், புனித நாளை முன்னிட்டு ஜனவரி 6, ஐனவரி 7 ஆகிய தேதிகளில் போர் நிறுத்த அறிவிப்பை நான் அறிமுகப்படுத்துகிறேன்.
businesstoday
உக்ரைன் நிராகரிப்பு
கிறிஸ்துமஸ் தினத்தில் மக்கள் சேவைகளில் பங்கு கொள்ள அனுமதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்க உக்ரைன் மறுத்துவிட்டது.
போர் நிறுத்த அறிவிப்பு குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேசும்போது, உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸிலில் எங்கள் ராணுவம் முன்னேறி வருகிறது.
அந்த முன்னேற்றங்களை நிறுத்தவும், போருக்கு தேவையான கூடுதல் ஆயுதங்களைக் கொண்டு வரவுமே இந்தப் போர் நிறுத்தத்தை ரஷ்யா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.